உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா ஆர்ச்சர்? - வெளியான முக்கிய தகவல்

x

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், உலக கோப்பை தொடரின் 2 ஆம் பாதியில் விளையாட வாய்ப்பிருப்பதாக, அந்த அணியின் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணியில்,ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. இதனால் அவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் அந்த அணியின் தேர்வு குழு தலைவர் லூக் ரைட், அனைத்தும் சாதகமாக நடந்தால், தொடரின் பிற்பகுதியில் ஆர்ச்சர் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். அதேநேரத்தில், அவ்வாறு நடக்கும் என தான் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்