Real IPL Starts Today.. பல்தான்ஸா? மஞ்சள் வீரர்களா? - பிளாக்பஸ்டர் சன்டேயில் El Clasico

x

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கக்கூடும்.

இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் மோத உள்ளன. பரம போட்டியாளர்கள் மோதும் இந்தப் போட்டி, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிக்கோவாகப் ( el classico) கருதப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு சீசனுடன் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுபெறும் பட்சத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் தோனியின் கடைசி போட்டியாக இது பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்