உலகக்கோப்பையுடன் கெத்தாக நாடு திரும்பிய வீராங்கனைகள்...உற்சாக வரவேற்பளித்த ஸ்பெயின் ரசிகர்கள்

x

மகளிர் உலகக்கோப்பையை முதன்முறையாக வென்ற ஸ்பெயின் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு மேட்ரிட்டில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த 20-ம் தேதி, சிட்னியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. உலகக்கோப்பையை வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். தங்கள் மீது நம்பிக்கை வைத்த ஸ்பெயின் மக்களுக்கு கோப்பையை சமர்பிப்பதாக வீராங்கனைகள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்