உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி...இந்தியா - நியூசிலாந்து மோதல்

x

நியூசிலாந்தின் பலம், பலவீனத்திற்கு ஏற்றபடி இந்தியா விளையாடும் என, அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்தது மனதில் இருக்குமென்றாலும், அதை பற்றி பெரிதாக யாரும் பேசிக்கொள்ளவில்லை என கூறினார். எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதிலும், எப்படி மெருகேற்றி கொள்வது என்பதிலும்தான், தங்கள் கவனம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலக கோப்பை தொடரில் சிறப்பான முறையில் அழுத்தத்தை கையாண்டதாக, அவர் தெரிவித்தார். நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து பேசிய ரோகித், அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அறிந்துள்ளதாக கூறினார். அனைத்து அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவும், அதற்கு ஏற்றார் போல் இந்தியா விளையாடும் எனவும் தெரிவித்தார். வான்கடே மைதானத்தில், டாஸ் வெற்றி, தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்