டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - மழை காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டங்கள் ரத்து

x

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - மழை காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டங்கள் ரத்து

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடர்ந்து மழை பெய்ததால், டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான், 154 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான், 19 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல், இந்தியா-நியூசிலாந்து, வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்களும் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்