சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதமடித்தவர்...ரோகித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்தார் மேக்ஸ்வெல்

x

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதமடித்தவர் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வேல் சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில், மேக்ஸ்வேல் 55 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 5வது சதமாக அமைந்தது. இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதமடித்தவர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை, அவர் சமன் செய்துள்ளார். ரோகித் சர்மா 143 இன்னிங்ஸ்களில் 5 சதமடித்துள்ள நிலையில், மேக்ஸ்வேல் 94 இன்னிங்ஸ்களில் 5 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்