"கதவுகள் மூடப்பட்டது" - சுனில் நரைன் அதிர்ச்சி தகவல்

x

டி20 உலகக்கோப்பை தொடரில் நாட்டிற்காக விளையாடப் போவதில்லை என, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாடி வரும் சுனில் நரைன், டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தான் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடிப்பதற்கான கதவுகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை ஆதரிப்பதாகவும், அவர்கள் உலகக்கோப்பை வெல்ல தகுதியானவர்கள் என்றும் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்