உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..வங்கதேசத்தை துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா

x

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 12 ரன்களுக்கும் வான் டெர் டுசன் 1 ரன்னுக்கும் வெளியேறினர். எனினும் மற்றொரு தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அபாரமாக ஆடினார். வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட டிகாக், சதம் விளாசினார். அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் மார்க்கரம் 60 ரன்கள் சேர்த்தார். சதமடித்த பிறகு ருத்ர தாண்டவமாடிய டிகாக் பவுண்டரி மழை பொழிந்தார். 174 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, கடைசி ஓவர்களில் கிளாசன் - மில்லர் ஜோடி வங்கதேசத்தை கலங்கடித்தது. சிக்சர்களைப் பறக்கவிட்ட கிளாசன், 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா, 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்