கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து கண்மூடித்தனமாக தாக்கிய இரு வீட்டார் - பதற்றத்தில் மூழ்கிய கிராமம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே, இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு, கம்பு, கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x

திருப்பாச்சேத்தி அருகே உள்ள வைகை மீனாட்சிபுரம் கிராமத்தில், உறவினர்களுக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதில், இருதரப்பினரும், கட்டை மற்றும் கற்களால் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த 7 பேர், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்