முகத்தில் ஒரே குத்தில் சுருண்டு விழுந்து வீரர் உயிரிழப்பு - பதற வைக்கும் பாக்ஸிங் வீடியோ

கர்நாடகாவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற வீரர் போட்டியாளரிடம் குத்து வாங்கி கீழே விழுந்த மற்றொரு வீரர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
x

பெங்களூரில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் மைசூர் நகரை சேர்ந்த 23 வயதான கிக் பாக்ஸர் நிகில் கலந்து கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் போட்டி வீரரிடம் குத்து வாங்கி, நிகில் உயிரிழந்தார். இதனையடுத்து போட்டி நடந்த இடத்தில் முதல் உதவி செய்ய மருத்துவ குழு அல்லது ஆம்புலன்ஸ் கூட இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூரூ போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நிகில் மரணம் அடைய காரணமாக இருந்த அந்த போட்டியின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்