வெஸ்ட் இண்டீஸின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட ஷமார் ஜோசப்..தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் உருக்கம்

x

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப் குறித்து படித்தபோது தனக்கு கண்ணீர் வந்ததாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். காபா டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு ஷமார் ஜோசப் வித்திட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஷமார் ஜோசப், செக்யூரிட்டியாக பணியாற்றியவர். இந்நிலையில், அவரது வாழ்க்கை குறித்து இணையத்தில் படித்து நெகிழ்ந்துபோனதாகவும், உத்வேகம் அளிக்கும் வகையில் ஷமாரின் வாழ்க்கை இருப்பதாகவும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்