உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை எப்போது..? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

ஆகஸ்ட் 25ம் தேதி இந்தியா அல்லாத மற்ற அணிகளின் பயிற்சி மற்றும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி இந்திய அணியின் பயிற்சி போட்டிகள், ஆகஸ்ட் 31ல் சென்னை, டெல்லி, புனேவில் இந்திய அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்கப்பட உள்ளது. செப்டம்பர் 1ல் தரம்சாலா, லக்னோ, மும்பையில் இந்திய அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது. செப்டம்பர் 2ல் பெங்களூரு, கொல்கத்தாவில் இந்தியா மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. செப்டம்பர் 3ல் இந்தியா பாகிஸ்தான் அகமதாபாத்தில் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. செப்டம்பர் 15ல் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் ரசிகர்கள் ஆன்லைனில் திரண்டால் சர்வர் பாதிப்பு ஏற்படும் என்பதால், ஒவ்வொரு கட்டமாக டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து ரசிகர்கள் டிக்கெட் தொடர்பாக பதிவு செய்து அப்டேட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்