99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. அபார வெற்றி

x
  • உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் ஹைதராபாத்தில் நெதர்லாந்தை சந்தித்தது நியூசிலாந்து...
  • வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டாததால் டாம் லாதம் நியூசிலாந்தை வழிநடத்தினார். டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
  • கடந்த போட்டியில் டக்-அவுட் ஆன யங், இந்தமுறை நிதானமாக ஆடினார். அவருடன் கான்வேவும் நேர்த்தியாக விளையாட முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர்.
  • கான்வே 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, யங்குடன் ஜோடி சேர்ந்தார்... இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். டேரைல் மிட்செல் 48 ரன்களும், லாதம் 53 ரன்களும் சேர்க்க, கடைசிக் கட்டத்தில் சான்ட்னர் அதிரடி காட்டினார். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது நியூசிலாந்து...
  • 323 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய நெதர்லாந்திற்கு வலுவான தொடக்கம் அமையவில்லை. பெரிய அளவில் பார்ட்னர்ஷிப்பும் உருவாகவில்லை. பாஸ் டீ லீட் அடித்த பந்தை எல்லைக்கோட்டருகே போல்ட் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
  • காலின்ஸ் அக்கர்மேன் மட்டும் அரைசதம் அடித்த நிலையில், நியூசிலாந்து ஸ்பின்னர் சான்ட்னரின் சுழலில் நெதர்லாந்து விக்கெட்டுகள் சரிந்தன. 5 விக்கெட்டுகளை சாய்த்தார் சான்ட்னர்...
  • சான்ட்னரின் சுழல் வலையில் சிக்கிய நெதர்லாந்து 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து.... தொடர்ச்சியாக 2 வெற்றிகளை ஈட்டியுள்ள நியூசிலாந்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்