இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து..5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி

x

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷாங்கா 2 ரன்களுக்கு டிம் சவுதி ஓவரில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலன்கா ஆகியோர் போல்ட் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். அதிரடி அரைசதம் அடித்த குசல் பெரேரா 51 ரன்களுக்கு வெளியேறினார். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டுக்கு தீக்சனா - மதுஷங்கா ஜோடி 43 ரன்கள் சேர்த்தது. 47வது ஓவரில் வெறும் 171 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்