வங்கதேசத்தை பொளந்து கட்டிய நெதர்லாந்து..! வேல்டுகப் வரலாற்றில் அடுத்த சாதனை

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அசத்தியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் மேக்ஸ் ஆடவ்ட் ரன் ஏதும் எடுக்காமலும், விக்ரம்ஜித் சிங் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பேரெஸி 41 ரன்களுக்கு வெளியேறினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், 68 ரன்களுக்கு மெஹிதி ஹசனிடம் கேட்ச் கொடுத்தார். எங்கல் பிரெச்ட் மற்றும் வான் பீக்கின் பங்களிப்பால் நெதர்லாந்து 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. வங்கதேச பவுலர்கள் ஷோரிஃபுல், தஷ்கின் அகமது, மெஹதி ஹசன், முஷ்தபிஷுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்