பேய் போல் காட்டடி அடித்த நரைன்..300-ஐ தொட சென்ற டார்கெட் - மரண பயத்தை காட்டிய கொல்கத்தா

x

#kolkata | #delhicapitals

பேய் போல் காட்டடி அடித்த நரைன்..300-ஐ தொட சென்ற டார்கெட் - மரண பயத்தை காட்டிய கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வீரர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர்.7 ஃபோர் மற்றும் 7 சிக்சர்களை பறக்கவிட்ட தொடக்க வீரர் சுனில் நரைன் 85 ரன்கள் எடுத்தார்.ரகுவன்ஷி, ரஸல், ரிங்கு சிங்கின் அதிரடியால் 20 ஓவர்களில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த 2வது அணி என்ற சாதனையையும் கொல்கத்தா படைத்தது.தொடர்ந்து 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் தடுமாறினர்.வார்னர் 18 ரன்களுக்கும் பிரித்வி ஷா 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் மற்றும் அபிஷேக் போரல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.5 சிக்சர்களை விளாசி அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் 18வது ஓவரில் 166 ரன்களுக்கு டெல்லி ஆல்-அவுட் ஆனது. கொல்கத்தா பவுலர்கள் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை ருசித்ததுடன் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது


Next Story

மேலும் செய்திகள்