உலக கோப்பை தொடரில் அசத்தும் முகமது ஷமி.. சொந்த ஊரில் சிறிய அளவிலான மைதானம் அமைக்கத் திட்டம்

x

இந்திய வேகப்பந்து வீச்சாளரின் முகமது ஷமியின் சொந்த ஊரில், சிறிய அளவிலான மைதானம் அமைக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கலக்கி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தநிலையில், ஷமியின் சொந்த ஊரான சஹாஸ்பூர் அலிநகர் கிராமத்தில் சிறிய அளவிலான மைதானமும், திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, குறிப்பிட்ட கிராமம் அமைந்துள்ள அம்ரோஹா மாவட்டத்தின் ஆட்சியர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்