மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன் | Lasith Malinga | Sunil Narine
மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்
ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பெற்றுள்ளார். கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது, சுனில் நரைன் 4 ஓவர்கள் பந்து வீசி, 34 ரன்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்காக 169 போட்டிகளில் விளையாடிய சுனில் நரைன் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக மும்பை அணி வீரர் மலிங்கா, 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில், அந்த சாதனையை சுனில் நரைன் முறியடித்துள்ளார்.
Next Story
