விடாமல் அடித்த சிக்சர் மழையால் ஹைதராபாத்தை கதற விட்ட கொல்கத்தா - அதிரடி ஆட்டத்தால் பறந்த விசில்

x

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ரன் குவித்தது. தொடக்க வீரர் சால்ட் அரைசதம் அடித்தார். கடைசி ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்த ஆன்ட்ரே ரஸல், 25 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் - அபிஷேக் சர்மா தொடக்க ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. மிடில் ஓவர்களில் ஹைதராபாத் சற்று தடுமாறியது. எனினும் கடைசி கட்டத்தில் ஹைதராபாத் வீரர் கிளாசன் சிக்சர்களைப் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் சிக்சர் அடித்த கிளாசன், 5வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 204 ரன்கள் எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா, தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்