4ம் சுற்றில் வெற்றி பெற்ற கீஸ்..3ம் நிலை வீராங்கனை பெகுலா வெளியேற்றம்..

x

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தகுதிபெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில் 3ம் நிலை வீராங்கனையும், சக நாட்டவருமான ஜெசிக்கா பெகுலாவை கீஸ் எதிர்கொண்டார். ஒருதரப்பாக அமைந்த இந்தப் போட்டியில் 6க்கு 1, 6க்கு 3 என்ற கணக்கில் மேடிசன் கீஸ் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வான்ட்ரசோவா உடன் கீஸ் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்