மும்பையில் கபடி வீர‌ர்,கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொடூர கொலை பொதுமக்கள் போராட்டம்

மும்பையில் கபடி வீர‌ர் அடித்து கொலை /பொதுமக்கள் போராட்டம் - 3 பேர் கைது
x

மும்பையில் கபடி வீரரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராவியில் வசித்து வந்த 26 வயது கபடி வீர‌ர் விமல்ராஜ் நாடாரை, மர்ம கும்பல் ஒன்று நேற்று நள்ளிரவு கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொலை செய்த‌து. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாராவி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக எம்எல்ஏ தமிழ்செல்வன், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார். இதனிடையே, கொலை தொடர்பாக 3 பேரை தாராவி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்