கைகொடுக்காத கோலியின் அதிரடி சதம்..வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர் - ஹாட்ரிக் தோல்வியில் RCB

x

ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளஸ்ஸி - விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது. டூபிளஸ்ஸி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஐபிஎல் போட்டிகளில் தனது 8வது சதத்தை அடித்தார். 20 ஓவர்களில் பெங்களூரு 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் - அவுட் ஆனார்.2வது விக்கெட்டுக்கு ஜாஸ் பட்லர் - கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய பட்லர் சதம் விளாசினார்.கடைசி ஓவரின் முதல் பந்தில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்த ராஜஸ்தான், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான், 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வீழ்ந்து பெங்களூரு ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்