ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் - GT-ஐ பந்தாடி CSK அபார வெற்றி

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா தொடக்க ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. பவர்பிளேவில் குஜராத் பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளால் பதம் பார்த்த ரச்சின் ரவீந்திரா, 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களுக்கு வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிவம் துபே சிக்சர்களைப் பறக்கவிட்டார். 46 ரன்களில் கெய்க்வாட்டும் 51 ரன்களில் துபேவும் கேட்ச் ஆகினர். இளம் வீரர் சமீர் ரிஸ்வி 2 சிக்சர்களை விளாச 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 206 ரன்கள் குவித்தது. டேரைல் மிட்செல் 24 ரன்களும் ஜடேஜா 7 ரன்களும் எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்