""Batsmen கவனத்திற்கு" - "அசைஞ்சா அசத்திடுவாரு" - `தல தோனி'-யின் புதிய சாதனை

x

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 முறை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி படைத்துள்ளார். தனது மின்னல் வேக செயல்பாடுகளால் விக்கெட் கீப்பிங்கில் தலைசிறந்து விளங்கும் தோனி, டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷாவின் கேட்ச்சை பிடித்தார். இது தோனியின் 300வது டிஸ்மிஸல் (dismissal) ஆக அமைந்தது. இந்த பட்டியலில் தோனிக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்