"மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்" - கன்ஃபாம் பண்ண கங்குலி

x

மீண்டும் பழைய முறைக்கு ஐபிஎல் போட்டிகள் திரும்ப உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக வெளிநாடுகளிலும், இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், மீண்டும் ஒரு போட்டி அணியின் சொந்த ஊரிலும், ஒரு போட்டி வெளியூரிலும் நடைபெறும் முறை திரும்ப உள்ளதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கங்குலி, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்