ஐபிஎல் மெகா ஏலம் எப்போது? எங்கே? | IPL 2025 | Auction

அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. வீரர்களை அணிகள் தக்கவைப்பதற்கான விதிமுறைகளை இந்த மாத இறுதியில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்றும், கடந்த ஆண்டைப்போல் இந்தியாவில் இல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் மெகா ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. துபாய், அபுதாபி அல்லது தோஹாவில் மெகா ஏலம் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com