அமெரிக்க செஸ் வீரரான ஃபேபியானா கருவானாவை எதிர்கொள்கிறார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா..

x

உலகக்கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, அரையிறுதிச்சுற்றில் விளையாடும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் போட்டியில், ஆடவருக்கான அரையிறுதிச்சுற்று இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் நிலையில், நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்சன், அசர்பைஜான் வீரர் நிசாத் அபசாவ்வை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா, மூன்றாம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானா கருவானாவை எதிர்கொள்கிறார். உலகக்கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு அரையிறுதியில் விளையாடும் 2வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, உலக செஸ் சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியான கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்