ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று...தோனி தலைமையில் சரித்திரம் படைத்த இந்திய அணி

x

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற தினம் இன்று... கடந்த 2011ம் ஆண்டு இதே நாள் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அப்போதைய கேப்டன் தோனி தலைமையில் உலகக்கோப்பையை இந்தியா உச்சிமுகர்ந்தது. கபில்தேவுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என தோனி சரித்திரத்தில் இடம்பெற்றார். இறுதிப்போட்டியில் தோனி அடித்த வின்னிங் சிக்சரும் ரவி சாஸ்திரியின் வர்ணனையும் என்றென்றும் பசுமை மாறாதவை... காலத்தால் அழிக்க முடியாதவை... இந்தியா உலகக்கோப்பையை வென்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெருங்கனவு நனவாக்கப்பட்ட அந்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்