சரவெடியாய் வெடித்த சூர்யகுமார் யாதவ்… வெஸ்ட் இண்டீசை வெளுத்தெடுத்த இந்தியா

x

சரவெடியாய் வெடித்த சூர்யகுமார் யாதவ்… மீண்டும் மாஸ் காட்டிய திலக் வர்மா - வெஸ்ட் இண்டீசை வெளுத்தெடுத்த இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள், 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, சூர்ய குமார் யாதவ் - திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால், 17.5 ஓவர்களியே 164 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்ய குமார் யாதவ் 83 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் எடுத்தனர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேற்கு இந்திய தீவுகள் 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்