கிரிக்கெட்டில் வெற்றி பெறாமலேயே தங்கம் வென்ற இந்திய அணி - நடந்தது என்ன..?

x

ஆசியப் போட்டிகள் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஹாங்சோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. 18 புள்ளி 2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் இந்தியா முன்னிலையில் இருப்பதன் அடிப்படையில், இந்தியா தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்