20 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா - வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா?

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறையும் இந்தியா 5 முறையும் வென்றுள்ளன. 20 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ள நிலையில், பழைய தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்கவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் 3 முறை சேஸிங் செய்த அணியே வென்றிருக்கிறது. ஆட்டத்தின் பிற்பாதியில் பனிப்பொழிவு வர வாய்ப்பிருப்பதால், டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்