இந்தியா-அயர்லாந்து 3வது டி20..வெற்றிவாகை சூடுமா இந்தியா ? | India T20

x

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி நாளை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. கடைசி டி20 போட்டியிலும் வென்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்