டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய வீரர்களுக்கு அடித்த ஜக்பாட்

x

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களுக்கான ஊக்கத்தொகையை, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அதன்படி ஓராண்டில் 75 சதவீத டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு, ஒரு போட்டிக்கு 45 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு, ஒரு போட்டிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஜெய்ஷா அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்