உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்-பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பாகிஸ்தானை இந்தியா மீண்டும் பந்தாடியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஷபிக் 20 ரன்களிலும், இமாம் உல் ஹக் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி நிதானமாக ஆடியது. அரைசதம் அடித்த பாபர் அசாம், சிராஜிடம் கிளீன் போல்டானார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்த நிலையில், 33வது ஓவரில் சஹீல் மற்றும் இஃப்திகாரை குல்தீப் யாதவ் வெளியேற்றினார். 49 ரன்களில் ரிஸ்வானும் 2 ரன்களில் சதாப் கானும் பும்ராவிடம் போல்டாகினர். இந்தியாவின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய பாகிஸ்தான், 43வது ஓவரில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்