நியூசிலாந்தையும் வீழ்த்தியது இந்தியா..4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

x

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர் கான்வே, சிராஜிடம் டக் அவுட் ஆனார். வில் யங் 17 ரன்களில் ஷமி ஓவரில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா - டேரைல் மிட்செல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ரவீந்திரா 75 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய மிட்செல் சதம் விளாசினார். கடைசி ஓவர்களில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த, 273 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்