உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான போட்டி இன்று - "வழிவிடுமா? வானிலை" அதிர்ச்சி தகவல்

x

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இன்றையப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை, ஆறுதல் வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற முயற்சிக்கக்கூடும். இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாக அமையவுள்ள இந்தப் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பெங்களூருவில் இன்று மதியம் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை மழையால் இந்தப் போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். இன்று தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி ரத்தானாலோ நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.


Next Story

மேலும் செய்திகள்