இந்தியா, அயர்லாந்து அணிகளின் முதல் டி20...கேப்டனாக களமிறங்கும் பும்ரா..அதிரடி காட்டுமா இந்தியா...

x

இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் அயர்லாந்தில் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கும் ஜஸ்பிரீத் பும்ரா, இந்திய அணியின் பதினோராவது டி20 கேப்டனாகவும் களமிறங்க உள்ளார். இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற உள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்