ஒலிம்பியாட் செஸ் போட்டி பணியில் தீவிரமாக ஈடுபடும் ஊழியர்கள்..! Chess Olympiad 2022 | Chennai

x

சென்னையில் ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு தம்பி குதிரை சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 44-வது செஸ் ஒலிம்பியாட்டின் அதிகாரப்பூர்வ சின்னமாக திகழும் 'தம்பி' குதிரை சிலையை 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இரவு பகல் பாராமல் தயாரித்து வருகின்றனர். அனைவரையும் செல்பி எடுத்துக்கொள்ள தூண்டும் இந்த குதிரை சிலை, சாலிகிராமத்தில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், சிலைகள் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகள் மிகவும் சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்