இன்ஸ்டாவில் கோடி கோடியாய் வருமானம்... ஒரு போஸ்ட்டுக்கு ரூ.11.45 கோடியா? - விராட் கோலி போட்ட ட்வீட்

x

இன்ஸ்டாவில் கோடி கோடியாய் வருமானம்... ஒரு போஸ்ட்டுக்கு ரூ.11.45 கோடியா? - பதறிப்போய் விராட் கோலி போட்ட ட்வீட்

விராட் கோலி தனது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் 11 கோடியே 45 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும், சர்வதேச அளவில் சமூக வலைத்தள பதிவு மூலம் வருமானம் ஈட்டும் நபர்களில் கோலி முன்னணியில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் பரவின. இந்நிலையில், இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கோலி, வாழ்க்கையில் பெற்ற அனைத்திற்கும், தான் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பதாகக் கூறி உள்ளார். தனது சமூக ஊடக வருமானம் குறித்து பரவும் தகவல்கள் உண்மையல்ல என்றும் கோலி தெரிவித்துள்ளார். கோலியின் இன்ஸ்டா வருமானம் குறித்த தகவல்கள் காட்டுத்தீபோல சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அது தற்போது வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்