ஆதிக்கம் செலுத்திய சீனா - தோற்ற இந்தியா | Foot Ball | India | China

x

ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் கால்பந்து போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சீனாவும் இந்தியாவும் மோதின. ஹோங்சோ நகரில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனிலை வகித்தன. ஆனால், 2வது பாதி ஆட்டத்தில் சீன வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க, இந்திய வீரர்கள் தடுமாறினர். 2வது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா, ஆட்ட நேர முடிவில் 5க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது


Next Story

மேலும் செய்திகள்