SRH-க்கு மரண பயம் காட்டிய DK.. RCB மானம் காத்த வீர தமிழன்.. உடைக்கப்பட்ட பல ரெக்கார்டுகள்

x

#srhvsrcbhighlights #dineshkarthik #dk

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி போராடி தோல்வி அடைந்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் தொடக்க வீரர்கள், டிராவிஸ் ஹெட்(TRAVIS HEAD), அபிஷேக் சர்மா ஜோடி பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தது.

8வது ஓவரிலேயே ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த நிலையில், அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய HEAD, வெறும் 39 பந்துகளில் 8 சிக்சர்களுடன் சதமடித்து அசத்தினார்.

102 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிளாசன் தன் பங்குக்கு ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்து 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார்.

இறுதிவரை பேட்டர்கள் அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 287 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் டூ பிளஸ்ஸி (DU PLESSIS) 28 பந்துகளில் 62 ரன்களும், விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்தனர்.

மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பினாலும், தமிழகத்தை சேர்ந்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இறுதிவரை வெற்றிக்காக போராடினார்.

இறுதிகட்டத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் பெங்களூரு அணி 262 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்