"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"..ருத்ரதாண்டவம் ஆடிய `Maxwell'..நெதர்லாந்துக்கு விழுந்த மரண அடி

x

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் வார்னர் சிறப்பாக ஆடினார். ஸ்டீவன் ஸ்மித்தும் வர்னருடன் ஜோடி சேர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், 71 ரன்களுக்கு ஸ்மித் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதமடித்து ஆட்டமிழந்தார். லபுஷேன் 61 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவர்களில் மேக்ஸ்வெல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சிக்சர்களைப் பறக்கவிட்ட மேக்ஸ்வெல், 40 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். மேக்ஸ்வெல்லின் அதிரடியால், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்