அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி...? | Dhoni | IPL

x

ஐபிஎல் போட்டிகளில் இருந்து, இன்னும் ஓய்வு பெறவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருக்குப் பிறகு கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, உடல்நிலையைப் பொறுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை முடிவு செய்வேன் எனக் கூறி இருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த தோனி,சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றதாகவும், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் கூறினார். காலில் ஏற்பட்ட காயம் நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக குணமாகும் என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்