டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி

x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இத்தாலி சாம்பியன் ஆகியுள்ளது.


ஸ்பெயினின் மலகா நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் அர்னால்டி, ஆஸ்திரேலிய வீரர் பாப்பிரினை 7க்கு 5, 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டிமினாரை 6க்கு 3, 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் வென்ற இத்தாலி 47 ஆண்டுகள் கழித்து டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்