டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு இத்தாலிக்கு முன்னேற்றம்

x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி முன்னேறி உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த செர்பியாவுடன் இத்தாலி மோதியது. ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் முசெட்டி, செர்பிய வீரர் மியோமிருடன் தோல்வி அடைந்தார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் செர்பியாவின் முன்னணி வீரர் ஜோகோவிச்சை, இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர் 6க்கு 2, 2க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இரட்டையர் பிரிவில் சின்னர்-சொனெகோ ஜோடி, ஜோகோவிச்-மியோமிர் ஜோடியை நேர் செட்களில் வென்றது. இதன்மூலம் 2க்கு 1 என்ற கேம் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்