சச்சினை முந்திய டேவிட் வார்னர் - வியந்து பார்க்கும் கிரிக்கெட் உலகம்

x

சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதமடித்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 46வது சதமாகும். இதன்மூலம், தொடக்க ஆட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் அதிக சதமடித்தவர் என்ற சச்சினின் சாதனையை, அவர் முறியடித்தார். சச்சின் தொடக்க ஆட்டக்காரராக 45 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சச்சின், டெஸ்ட் போட்டிகளில் 4 வது வரிசையில் களமிறங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்