"தோனிக்காக ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தத்தை போல, வேறு எங்கும் கேட்டதில்லை"

x

ஐபிஎல் தொடரில் தோனி பேட் செய்ய களமிறங்கும்போது, சென்னை உட்பட அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மிட்சல் ஸ்டார்க், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்காக ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தத்தை போல, வேறு சத்தத்தை தான் எங்கும் கேட்டதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் ஆர்ப்பரிக்கும் 30 ஆயிரம் ரசிகர்களின் சத்தத்தை, ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் மெல்போர்ன் மைதானத்தில் கூட கேட்க முடியாது என்றும் ஸ்டார்க் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்