அரைமணி நேரத்தில் காலியான டிக்கெட்டுகள்... உடனே CSK போட்ட போஸ்ட்

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தன. வருகிற 26ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு இன்று காலை 10.30 மணிக்கு PAYTM மற்றும் WWW.INSIDER.IN இணைய தள பக்கம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஏராளமான ரசிகர்கள் இணையதள பக்கத்தில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில், டிக்கெட் விற்பனை முடிவடைந்துவிட்டதாக சி.எஸ்.கே அணியின் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்