ஆசிய போட்டிகள் தொடர்... மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் விலகல்

x

சீனாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஆசியப் போட்டிகளில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் விலகி உள்ளார். முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தன்னால் ஆசியப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என போஹத் அறிவித்துள்ளார். ஆசியப் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போஹத்துக்கு நேரடியாக வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். வினேஷ் போஹத்துக்கு பதிலாக ரிசர்வ் வீராங்கனையாக ஆன்டிம் பங்கல் சேர்க்கப்பட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்