ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்...இந்தியா - ஜப்பான் போட்டி கடைசியில் நடந்த TWIST

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா - ஜப்பான் இடையிலான லீக் போட்டி, சமனில் முடிந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியாவும் ஜப்பானும் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய நிலையில், ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் நகயோஷி கென், கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை மீறி, 43வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். கடைசி நேரத்தில் இரு அணியினரின் கோல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்